திமிங்கிலமும் சிக்கலான உறவு முறைகளைக் கொண்ட சமூகமே!

மனிதர்களைப் போன்றே சிக்கலான உறவு முறைகளைக் கொண்ட சமூகமாக, திமிங்கிலமும் திகழ்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

தங்களுக்கென்று தனி மொழி, கலாசாரத்துடன் வாழ்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நேச்சர் எகாலஜி அண்ட் எவலுாஷன்’ இதழில், இது குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகிஉள்ளன.

அமெரிக்காவிலுள்ள, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஆய்வுக்குழு, 90 வெவ்வேறு திமிங்கிலம், டொல்பின் சமூகங்களை விரிவாக ஆராய்ச்சி செய்தது.

இந்த ஆய்வில், இந்த கடல் வாழ் உயிரினங்கள், மனிதர்களைப் போலவே, தங்களுக்கென தனி வட்டார மொழியைக்கூட பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

கூட்டாக வேட்டையாடுவது, நலம் விசாரிப்பது, அடுத்தவருக்கு பயனுள்ள உதவிகளை செய்வது என்று மனிதர்களைப் போலவே நடந்து கொள்வதற்கு, இந்த உயிரினங்களின் மூளையின் அளவும் ஒரு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.