திருகோணமலையில் பெண்ணொருவரின் வீட்டுக்குள் புகுந்து 4 இளைஞர்கள் செய்த காரியம்!

பெண்ணொருவரின் வீட்டுக்குள் புகுந்து தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை, குச்சவெளியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்று குறித்த நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போதே இம்மாதம் 13ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சலப்பையாறு, குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 27,26,23 மற்றும் 21 வயதுடைய நால்வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.