திருடிய காருக்குள் மாட்டிக் கொண்ட திருடன்- சுவாரஸ்ய சம்பவம்

திருடிய காருக்குள் திருடன் மாட்டி கொண்டதால் பொலிசாரை அழைத்து உதவி கேட்ட சம்பவம் நோர்வே நாட்டில் இடம்பெற்றுள்ளது.

நோர்வே நாட்டில் ட்டோந்தலக் என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றை திருட முயன்றுள்ளான்.

காருக்குள் ஏற தன்னிடம் இருந்த போலி சாவியைப் பயன்படுத்தி காரைத் திறந்து உள்ளே சென்ற நிலையில் கார் ஆட்டோ லாக்கில் விழுந்துள்ளது. அதை திறக்க முற்பட்டும் வேலைக்கு ஆகவில்லை.

இந்நிலையில் கார் திறக்காததால் கிலி கொண்டுள்ளார்.

பின்பு மூச்சு முட்டி இறந்து விடவேண்டும் நினைத்து அச்சம் கொண்டு தன்னிடம் இருந்த மொபையில் போன் மூலம் பொலிசாரை உதவிக்கு அழைத்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து உடனே அங்கு வந்த பொலிசார் அவனை பத்திரமாக மீட்டனர்.

குறித்த இளைஞனுக்கு வயது பூர்த்தியடையாததால் இளைஞனின் பெற்றோரை அழைத்த பொலிசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.