திருமணமான 2 மாதத்தில் புதுப் பெண்ணிற்கு நடந்த கொடுமை!

காதல் திருமணம் செய்து கொண்ட புதுப்பெண் 2 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் என்பவரின் மகன் திருமூர்த்தி (26).

இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த பலபந்தகொட்டா பகுதியை சேர்ந்த ஆர்த்தி (21) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பெற்றோர் இல்லாத ஆர்த்தி அவரது அண்ணன் அருண்குமார் பராமரிப்பில் வாழ்ந்தார்.

குறித்த புதுமணதம்பதிகள் ஜோலார்பேட்டை மேட்டுசக்கரகுப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்

இந்நிலையில் ஆர்த்தி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப் பார்த்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ஆர்த்தியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆர்த்தி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.