திருமணம் செய்து 7 குழந்தைகளைப் பெற்ற அண்ணனும் தங்கையும்: வெளியான அதிர்ச்சிப் பின்னணி

அவுஸ்திரேலியாவில் அண்ணனும் தங்கையும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Griffith பகுதியில் வசித்து வந்த Tim மற்றும் June ஆகிய அண்ணன் தங்கை இருவரும் இணைந்து 7 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளனர்.

Martha(33), Frank, Paula, Betty(46), Cheery, rhonda(47), charlie. இதில், Martha க்கு 6 பிள்ளைகள், Betty க்கு 13 பிள்ளைகள், Cheery க்கு 3 பிள்ளைகள் மற்றும் rhonda 5 பிள்ளைகள் உள்ளனர்.

சகோதரர்களுக்குள் குடும்பம் நடத்தி குழந்தை பெற்று கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இதில், அதிர்ச்சி தகவல் என்னவென்றால் 5 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனர்.

அண்ணன் – தங்கைக்கு பிறந்த 7 குழந்தைகளின் எண்ணிக்கை அவர்களின் உள்ளினச்சேர்க்கை உறவுமுறையால் தற்போது 40 பேராக உள்ளனர்.

இவர்களுக்கு முறையாக காது கேட்பதில்லை, சரியாக பேசவும் முடியவில்லை. ரத்த சொந்தங்களுக்குள் திருமணம் செய்துகொண்ட காரணத்தால் மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளியுலக தொடர்பினை தவிர்த்து வாழ்ந்த இவர்கள், மின்சார வசதி, தண்ணீர் வசதியின்றியும் மற்றும் எவ்வாறு கழிவறையை பயன்படுத்துவது என்பது கூட தெரியாமல் வாழ்கின்றனர்.

இவர்கள் குடும்பம் பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்