தில்லுக்கு துட்டு 2 படம் குறித்த வெளியான முக்கிய தகவல்!

சந்தானம் – அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை  ‘தில்லுக்கு துட்டு’ படம் பெற்றது.

நகைச்சுவை கலந்த திகிலாக இப்படம் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் இப்போது உருவாகி வருகிறது.

முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ஷிர்தா சிவதாஸ் நடிக்கிறார்.

ஆனந்தராஜ் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் பிரபலமான அய்யப்பா பைஜூ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

`தில்லுக்கு துட்டு 2′ படத்தின் முதல் சிங்கிள் ஜனவரி 12ம் திகதி இன்று வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.