துவசம் செய்து விடாதே என் காதலுக்கு..!

இதயத்தை உடைத்து
நீராகிறாய் என்
கண்களில்..!

தழுவிச் செல்லும்
காற்றாய் எனைத்
தழுவிச் சென்றவன்
இப்போது
ததும்பும் வேதனையில்
கவிதையாய் முளைத்து
இதயத்தை பிளக்கிறாய்..!!

தூண்டிலில் சிக்கிய மீன் போல்
ஆனேன் நானடா
துவசம் செய்து விடாதே
என் காதலுக்கு..!!!

-யாழ்ரதி-
இந்தியா