தென்றலும் வடுவாகியது!

காயத்துக்கு மருந்து
தேட
மருந்தும் காயமானது
காதலால்..!!

கைதொட முடியாது
கை நழுவிச்
சென்ற காதல்
கலந்தது காற்றோடு..!!

உரசிச் செல்லும்
தென்றலும்
வடுவாகியது உள்ளத்தில்!

-மதுமிதா-
இந்தியா