தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் இவர் தானா..??

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்டுக்கான தென் ஆப்பிரிக்க அணியின் பொறுப்பு கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

இதனைத் தொடர்ந்து 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பெர்க்கில் நாளை தொடங்குகிறது. 2 வது டெஸ்டின்போது தென் ஆப்பிரிக்க அணி மெதுவாக பந்து வீசியதாக புகார் எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் அணித்தலைவர் பாப் டூ பிளிஸ்சிஸ்க்கு ஒரு டெஸ்ட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதனால் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டில் பாப் டூ பிளிஸ்சிஸ் விளையாட முடியாததால், டீன் எல்கர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

31 வயதாகும் டீன் எல்கர் 53 டெஸ்ட்களில் 3359 ஓட்டங்கள் குவித்துள்ளார்

மேலும் வலது கால் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் அவதிப்படுவதால் புதுமுக வீரர் பீட்டர் மாலன் கூடுதலாக டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.