தெஹிவளையில் ஐ.எஸ் அமைப்பினர் பதுக்கிய பாரிய அளவிலான பணத்தை காட்டிக் கொடுத்த தந்தை!

கடந்த மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய தெஹிவளை பிரதேச வீடு ஒன்றில் இருந்து 23,500 அமெரிக்க டொலர் பணம் சிக்கியுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு தொடர்புடையதென சந்தேகிக்கப்படும் இந்த பணம் சட்டரீதியாக அச்சிடப்பட்ட அமெரிக்க டொலரா என்பது தொடர்பில் விசாரணை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் தனூஷா ஜயதுங்க வங்கி முகாமையாளருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய தெஹிவளை பிரதேச வீடு ஒன்றில் இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெறும் உறவினர்கள் இருவர் தெஹிவளை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

தற்போது சிரியாவில் உள்ள அவர்கள் இருவரும் அந்த பணத்தை இலங்கையில் தங்களுக்காக பாதுகாத்து கொள்வதற்கு இவ்வாறு வைத்துள்ளதாக குறித்த இருவரது தந்தையான அந்த வீட்டின் உரிமையாளர் பயங்கரவாத விசாரணை பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டிற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமையவே குறித்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.