தேனில் ஊறவைத்த பூண்டில் இத்தனை மருத்துவ குணங்களா..?

பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக உள்ளது.

இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு பூண்டு சிறந்த மருந்தாக விளங்குகின்றது.

குறிப்பாக சுத்தமான தேனில் ஊறவைத்த பூண்டு சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமித் தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்க சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது.

அதுமட்டுமின்றி, உடல் எடை அதிகரிக்க மற்றும் குறைக்க என இரண்டிற்கும் பயன்தரும் தன்மையையும் பூண்டு கொண்டுள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு தேனை தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் கலந்து பருகலாம்.

சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும், சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல்நலப் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றது.