தேர்வு எழுத அனுமதி மறுப்பு: விரக்தியில் தூக்குப் போட்டு மாணவி தற்கொலை!!

பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள ரச்சகொண்டா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த 14 வயது மாணவி பள்ளியிலிருந்து திரும்பியதும் தன் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அத்துடன் குறித்த மாணவி பையில் தன் தற்கொலைக்கான காரணத்தை தெளிவாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றர்.