தோனிக்கு அதிர்ச்சி கொடுத்தவர்கள் கைது!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனியின் வீட்டில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை, பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டர் 104 பகுதியில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. இந்த வீட்டை விக்ரம் சிங் என்பவரின் பொறுப்பில் விட்டிருந்தார்.
பராமரிப்பு பணிகள் நடந்துக் கொண்டிருந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தோனியின் வீட்டில் இருந்த LED TV, மடிக்கணினி, Battory, Inoveter ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் பல்வேறு வீடுகளில் கொள்ளையடித்தது தொடர்பாக ராகுல், பப்லு, இக்லக் ஆகிய 3 பேர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு வேறு ஏதாவது திருட்டில் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்த போது, அவர்கள் தோனியின் வீட்டில் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“நொய்டாவில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் தோனியின் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்து கொண்ட 3 கொள்ளையர்களும், வீட்டின் கதவை உடைத்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்கழள கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்தனர். மேலும், ஆதாரங்களை அழிக்கும் வகையில் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரையும் உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.