நடிகர் சக்தி போதையில செய்த வேலை! வேட்டி அவிழ்ந்தது கூடவா தெரியாது? (வீடியோ)

இயக்குனர் வாசுவின் மகன் சக்தி அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு செம போதையில் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகர் சக்தி 11 படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் சென்னை சூளைமேட்டில் பட்டப் பகலில் நண்பருடன் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு அவரது போர்டு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

இளங்கோவடிகள் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த மாருதி ஆல்டோ காரில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற அவரது காரை அங்குள்ள இளைஞர்கள் சிலர் விரட்டி பிடித்தனர்.

அவர் அணிந்திருந்த வேட்டி அவிழ்ந்த விழுவது கூட தெரியாமல், நிற்ககூட மதியில்லாத நிலையில் தள்ளாடி விழுந்த நடிகர் சக்தியை இளைஞர் ஒருவர் தாங்கிப் பிடித்தார்.

அத்தோடு சக்தியுடன் வந்தவர் காரை எடுத்து செல்ல முற்படுகையில் அங்கிருந்த நபர் ஒருவர் பணக்காரன் என்ற திமிரா என கேள்வி கேட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து செல்லப்பட் சக்தி விசாரணைக்கு பிறகு அனுப்பப்பட்டார்.