நடிகர் வீட்டு வாசலில் தீக்குளித்த ரசிகர்!

நடிகர் யஷின் தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். படம் ரூ. 200 கோடி வசூல் செய்தமை அறிந்ததே.

திரையுலகமே வியக்கும் வகையில் வெற்றிப் படம் கொடுத்த யஷ் நேற்று தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியிருக்க வேண்டும்.

நடிகர் அம்பரீஷை தன் வீட்டின் மூத்த உறுப்பினராக யஷ் நினைத்து வந்தார்.

இதனால் அவரது இறப்பைத் தொடர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. இதை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

யஷ் தனது பிறந்தாளை கொண்டாடவில்லை என்பதை அறிந்து ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

இதையடுத்து ரவி என்கிற ரசிகர் யஷ் வீட்டு வாசலில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றும் வரும் ரவியை மருத்துவமனைக்கு யஷ் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.