நடிகை செய்த வேலையால் டென்ஷனான இயக்குனர்: இருவருக்கும் சண்டையா?

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.

தற்போது கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் அலேகா படத்தை புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். போர்வைக்குள் காதலர்களின் கால்கள் மட்டும் தெரியும்படி உள்ள படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

அது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது காம படம் இல்லை, காதல் படமாக உருவாகிறது என்று படக்குழுவினர் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில், படப்பிடிப்பில் தற்போது இயக்குனருக்கும், நடிகைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது,

“படப்பிடிப்புக்கு தினமும் நடிகை தாமதமாக வந்தார். அவருக்காக மற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் காத்திருக்க வேண்டி இருந்தது.

சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வரும்படி நடிகையிடம் வற்புறுத்தியும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் இயக்குனர் பொறுமை இழந்து அவரை கண்டித்தார்.

இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது என்று கூறினர் என்று தெரிவித்துள்ளனர்.