நடுவர் திருடன்: வசைபாடிய செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் 36 வயதான செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டியதால் அவர் 2 விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.

முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றிக் கூறினார்.

ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 வதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்தார். இதனால் செரீனா பல முறை கோபத்தில் நடுவரை திட்டி தீர்த்தார்.

இதுகுறித்து செரீனா கூறுகையில்;

நான் மோசடி எதுவும் செய்யவில்லை. பயிற்சியாளர் என்ன சிக்னல் கொடுத்தார் என்று நான் பார்க்கவில்லை. நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். திருடர்.

என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் தான் என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இந்த விளையாட்டில் ஆண்களை விட பெண்களிடம் நடுவர்கள் நடந்து கொள்ளும் விதம் வேறுபாடானது.

வீராங்கனைகளுக்கு சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண்களின் உரிமைக்காக நான் போராடுகிறேன் என்று கூறினார்.

இந்த நிலையில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் சிக்னல் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தான் கொடுத்த சைகையை செரீனா பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.