நள்ளிரவில் ஓரினச்சேர்க்கை: இறுதியில் ஏற்பட்ட விபரீதம்

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளர்.

திருப்பூர் மாவட்டம் கூனப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(34). தனியார் நிறுவனம் ஒன்றில் இவர் வேலை செய்து வந்தார்.

கோவிந்தராஜுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். கோவிந்தராஜின் குடிப்பழக்கத்தால் அவரது மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் கோவிந்தராஜுக்கு புது நண்பர்கள் அறிமுகமானார்கள். அவர்களுடன் கோவிந்தராஜ் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தார்.

சம்பவத்தன்று நள்ளிரவும் நடுக்காட்டில் நண்பர்களுடன் ஓரினச்சேர்க்கையில் கோவிந்தராஜ் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட தகராறின்போது, கோவிந்தராஜை சக நண்பர்கள் அடித்து கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிந்து இந்த கொலையில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.