நவம்பர் 06: சாக்சபோனைக் கண்டுபிடித்த பிரான்சியர் அடோல்ப் சக்ஸ் பிறந்த தினம்!

அடோல்ப் சக்ஸ் (1814-1894) பெல்ஜியத்தைச் சேர்ந்த இசைக்கருவி வடிவமைப்பாளர்.

சக்சபோனைக் கண்டுபிடித்தவர் இவராவார். இவரது தகப்பனாரும் ஒரு இசைக்கருவி வடிவமைப்பாளர் ஆவார். 1894 இல் பாரிசில் காலமானார்.

அந்தோணி சோசப் சக்சு பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த சார்லசு-சோசப் தம்பதியருக்குப் பிறந்தார்.

இவரது பெயர் ‘அந்தோணி’ என்றிருப்பதால் சிறுவயதில் ‘அடோல்ப்’ என அழைக்கப்பட்டார்.

இவரது பெற்றோர்கள் இசைக் கருவி வடிவமைப்பாளர்கள். ஊதுகுழலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியவர்கள் அவர்கள்.

‘அடோல்ப்’ அவரது இளம் வயதில் இசைக் கருவிகள் உருவாக்க ஆரம்பித்தார்.