நவம்பர் 17: டென்சின் கியாட்சோ 14வது தலாய்லாமா ஆக பதவியேற்பு!

ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ திபெத்தின் 14 தலாய் லாமா ஆவார்.

ஜூலை 6, 1935 இல் பிறந்தார். இவர் 1950-ம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி தலாய் லாமா-ஆக பதிவி ஏற்றார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார்.

இவர் திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக திபெத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

ஆனால் திபெத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

1958 ஆண்டு திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் தரம்சாலாவிற்கு புகலிடம் வந்து வாழ்கிறார்.

இவர் ஆன்மீகம் அரசியல் துறைகளில் மட்டுமல்லாமல் அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர்.

ஆன்மீகத்தை அறிவியல் எங்கு பிழை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறதோ அதை ஆன்மீகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

அதாவது The Universe in a Single Atom என்ற அவரது ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார்.