நாட்டை விட்டு தப்பி வந்த பெண்ணுக்கு அவுஸ்திரேலியாவில் அடைக்கலம்?

தாய்லந்துக்குத் தப்பியோடிய சவுதி அரேபியப் பெண்ணுக்கு அடைக்கலம் அளிப்பது குறித்துப் பரிசீலிக்கப் போவதாக கான்பரா கூறியது.

இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் Marise Payne பேங்காக் சென்றுள்ளார்.

18 வயது ரஹப் முகமது அல்-குன் (Rahaf Mohammed al-Qunun) தற்போது பேங்காக் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கின்றார்.

தனது குடும்பத்தினர் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர்கள் தன்னைக் கொன்றுவிடுவர் என்று தான் அஞ்சியதாகவும் அவர் கூறினார்.

தாய்லந்தில் பாரேய்ன் (Bahrain) காற்பந்து விளையாட்டாளர் சிறைவைக்கப்பட்டிருக்கும் விவகாரம் பற்றியும் Payne கலந்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லந்திலிருந்து அவர் பாரேய்னுக்குத் திரும்ப அனுப்பிவைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. குனுன் தனது தந்தையையும் சகோதரனையும் சந்திக்க மறுத்துவிட்டார்.அவர்கள் அவரை சவுதி அரேபியாவுக்கு அழைத்து செல்வதற்காக பேங்காக் சென்றிருந்தனர்.

குனுன் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை அவர்கள் மறுத்தனர். இதற்கு முன் குனுன் பேங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இறங்கியபோது பேங்காக்கிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார்.

பேங்காக்கிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். அதன் பின் திங்கட்கிழமை பேங்காக்கிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்.