நான்காவது ஒருநாள் போட்டி: இலங்கை வெற்றி

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

மழை காரணமாக போட்டி 39 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இலங்கை அணி சார்பாக தசுன் சானக 65 ஓட்டங்களையும், திஸர பெரேரா மற்றும் குசல் ஜனித் பெரேரா இருவரும் தலா 51 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.

பதிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்களில் 191 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி, 9 விக்கட் இழப்பிற்கு 187 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.