நிஜ வயதை விட 10 வயதைக் கூட சொல்லவும் தயார்!

இந்தியன் 2 படத்தில் நடிப்பதை ஆர்வமுடன் எதிர்பார்த்த அந்த அகர்வால் நடிகை படப்பிடிப்பு தள்ளி போவதால் சற்று வருத்தம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்

‘எந்த துறையை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களிடம் உங்கள் வயது என்ன என்று கேட்டால் சொல்ல தயங்குவார்கள்.

ஆனால் நான் அப்படி கிடையாது. என் நிஜ வயதை மறைக்க விரும்பவில்லை. வயதை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை.

படங்களில் தங்களை மிகவும் வயது குறைந்தவர்கள் போன்று காட்ட நடிகைகள் கஷ்டப்படுகிறார்கள். என்னிடம் வயதை கேட்டால் நிஜத்தை விட கூடுதலாக 10 ஆண்டை சேர்த்து சொல்லவும் நான் தயார்.

சினிமாவில் நான் 10 ஆண்டுகளாக இருந்ததால் நிறைய அனுபவம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.