நினச்சத சாதிச்சுட்டோம்! மகிழ்ச்சியில் சர்கார் படகுழு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் உலக அளவில் வசூல் சாதனையை படைத்துள்ளது.

கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் வசூல் செய்து சர்கார் படம் அபார சாதனையை படைத்துள்ளது.

பலருக்கும் தெரியாத விடயம் ஒன்று சர்கார் படத்தில் உள்ளது. இந்திய சட்டத்தின்படி நமது ஓட்டை யாராவது கள்ள ஓட்டாக போட்டுவிட்டால் 49 பி சட்டத்தின்படி நம் ஓட்டை நாமே மீண்டும் போட முடியும்.

இது பலருக்கும் தெரியாத நிலையில் சர்காரில் அதை தெரிவித்துள்ளனர். படத்தை பார்த்த பலரும் 49 பி பற்றி கூகுள் செய்து பார்த்துள்ளனர்.

இந்நிலையில் சர்கார் படத்தை பார்த்தவர்கள் பலர் கூகுளில் 49 பி சட்டம் பற்றி தேடியுள்ளனர்.

49 பி சட்டத்தை பிரபலபடுத்திவிட்டோம் என்று சர்கார் படக்குழு தற்போது பெருமிதம் அடைந்துள்ளது.

மேலும், 49 பி சட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மகிழ்ச்சியில் முருகதாஸ் ட்விட்டரில் தனது படத்தை 49P என்பதையே மாற்றி வைத்துள்ளார்.