நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய அவுஸ்திரேலியருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

நியூசிலாந்தில் உள்ள மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய அவுஸ்திரேலிய நபரை ஏப்ரல் 5 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (15) துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பிரென்டன் டாரன்ட் என்ற 28 வயதான அவுஸ்திரேலியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது பிரென்டன் டாரன்ட் ஜாமீன் எதுவும் கோரவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

அதுவரை பிரென்டனை காவலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில், பிரென்டன் டாரன்ட் ஆஜர்படுத்தப்பட்டதால், நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.