நியூசிலாந்தை அதிர வைத்த துப்பாக்கி சூடு! கடும் மனவேதனையில் கனேடிய பிரதமர்

நியூசிலாந்தில் உள்ள மசூதிகள் இரண்டில் மிகவும் மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதற்கு தனது கடுமையான கண்டனைத்தைப் பதிவு செய்துள்ளார்.

துப்பாக்கிதாரி ஒருவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தனது செயலை நேரடியாக ஒளிபரப்புச் செய்தவாறு இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு மேற்கொண்ட இந்த பாரதூரமான தாக்குதலில் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் குறித்த இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டுவிட்டர் ஊடாக தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

“மக்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளமை மிகவும் பாரதூரமான ஒரு செயல்.

இந்த கொடூரமான சம்பவத்தினால் துயருற்றிருக்கும் நியூசிலாந்து மக்களுடனும், உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமூகத்தினருடனும் கனேடியர்களும் இணைந்து கொள்வதாகவும்|” அதில் குறிப்பிட்டுள்ளார்.