நியூசிலாந்தை உலுக்கிய துப்பாக்கி சூடு! இலங்கையர்களுக்கு பாதிப்பா?

நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா ஆராயப்பட்டு வருகின்றது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து இலங்கையர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Christchurch பகுதியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் காரணமாக 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமு.

இந்நிலையில் இந்த தாக்குதல் காரணமாக இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக, தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் பிரதித் தூதுவர் செனரத் திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.