நியூசிலாந்தை உலுக்கிய துப்பாக்கி சூடு! நேரில் பார்த்த இலங்கையர்களின் திகில் அனுபவம்

நியூசிலாந்தின் Christchurch பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலில் இன்று கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நடந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு இலங்கையர்கள் தமது அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள தொழில் நிலையத்தில் இருந்த இலங்கையரான ரொஷான் பெரேரா, தெரிவித்ததாவது,

“இந்த சம்பவம் நியூசிலாந்து நேரப்படி இன்று மதியம் 12.30க்கும் 1.30க்கும் இடையில் நடந்தது. சம்பவம் நடந்த நேரத்தில் பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் எனது அலுவலகத்தில் இருந்தேன். சம்பவத்தின் பின்னர் அனைத்து அலுவலகங்களும் பூட்டப்பட்டன.

எனது மனைவி பாடசாலை ஒன்றில் பணிப்புரிகிறார். நாங்கள் அனைவரும் அலுவலங்களுக்குள் முடங்கினோம்.

சற்று நேரத்திற்கு முன்னரே வீட்டுக்கு செல்ல முடிந்தது. தற்போது வீதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. நியூசிலாந்தல் இது போன்ற பயங்கரவாத தாக்குதல் நடப்பதில்லை.

இந்த சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. 8 வருடங்களுக்கு முன்னர் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 200 பேர் இறந்து போனார்கள். அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.

அப்படியான நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால், மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சாதாரண நியூசிலாந்தில் குற்றச் சம்பவங்கள் நடப்பது மிகவும் குறைவு” என ஹேஷான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நியூசிலாந்தில் வசித்து வரும் மேசிஸ்ஸா சோமவர்தன,

“தாக்குதல் சம்பவத்தால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. எவ்வாறாயினும் இந்த தாக்குதல் இலங்கையர்கள் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவங்கள் நடந்த இடத்தில் இருந்து சில குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மீண்டும் அறிவிக்கப்படும் வரை அனைத்து இஸ்லாமிய பள்ளிவாசல்களையும் மூடுமாறு நியூசிலாந்து அதிகாரிகள் அறிவித்துள்ளன.

Christchurch பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. நியூசிலாந்தின் Christchurch பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.