நிலத்தில் புதையுண்டு கிடந்த மோட்டார் குண்டு மீட்பு!

நிலத்தில் புதையுண்டு கிடந்த மோட்டார் குண்டு ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, காத்தார்சின்னகுளம் பகுதியில் இருந்து இந்தக் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நீர் வடிகாலமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஊழியர்கள் மண் அள்ளும் இயந்திரத்தின் மூலம் நிலத்தை தோண்டும் போது சிறியரக மோட்டார்குண்டு ஒன்றை கண்டுள்ளனர்.

இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து விரைந்த பொலிசார், குண்டை பரிசோதித்ததுடன் விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் நாளையதினம் நீதிமன்ற உத்தரவிற்கமைய குண்டு செயலிழக்க உள்ளதாக தெரிகிறது.