நீர்கொழும்பு உணவகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டால் பதற்றம்!

நீர்கொழும்பு, கட்டான திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பாதுகாப்பு படையினர் பையொன்றிலிருந்து குண்டொன்றை மீட்டெடுத்துள்ளனர்.

திம்பிரிகஸ்கொட்டுவ உணவகத்தில் இலங்கை விமானப்படையினால் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குண்டை மீட்டெடுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அதனை பாதுகாப்பாக செயழிலக்கச் செய்துள்ளனர்.

பை ஒன்றில் இருந்து இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.