நூற்றுக்கணக்கானோர் பலி! குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

இலங்கை இன்று அதிர வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூடிய எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பான தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்டதாக அரசாங்க புலனாய்வு பிரிவினால், பாதுகாப்பு அமைச்சிற்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் ஆயத்தங்கள் தொடர்பில் அரசாங்க புலனாய்வு பிரிவினால் பாதுகாப்பு பிரிவிடம் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் கடிதம் மூலம் மேலதிக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவித்து பொறுப்பான பிரிவுகளுக்கு கடிதம் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த எச்சரிக்கை தொடர்பான உண்மைத்தன்மை குறித்து இதுவரையில் பாதுகாப்பு அமைச்சு அலலது பொலிஸ் திணைகளத்தினால் உறுதி செய்யப்படவில்லை என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இதுவரை ஆறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இதில் நூற்றுக்கும் அதிகமானொர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.