நெத்திலி கருவாட்டுக் குழம்பு!

நெத்திலி கருவாட்டுக் குழம்பு செய்யவது எப்படி என்று தெரிந்து கொள்வோம். வாங்க

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் -1கப்(நறுக்கியது)
நெத்திலிக்கருவாடு -20
புளிகரைசல் – கால் கப்
உப்பு -தேவையான அளவு
மஞ்சள்பொடி – கால் ஸ்பூன்

வறுத்து அரைக்க தேவையானவை:

சின்னவெங்காயம் -10
தனியா – அரை ஸ்பூன்
காய்ந்தமிளகாய் -2
பூண்டு -2 பல்
சீரகம் – கால் ஸ்பூன்
தேங்காய்துறுவல் – கால் கப்
தக்காளி -1
எண்ணை -1ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை -1ஸ்பூன்
கடுகு -1 கால் ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
வெந்தயம் – கால் ஸ்பூன்

செய்முறை :

கருவாட்டை சுடுதண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து நன்கு அலசி வைக்கவும்.

வறுத்து அரைப்பதற்கு மேலே கொடுக்கப்பட்ட பொருட்களை எண்ணையில் வறுத்து நன்கு அரைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு,வெந்தயம் போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலை போட்டு சுரைக்காய் போடவும்.

காய் நன்கு வதங்கியவுடன் அரைத்தவிழுது, புளிக்கரைசல் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி மஞ்சள்பொடி,உப்பு போட்டு மூடிவைத்து வேகவிடவும்.

காய் வெந்தவுடன் கருவாடு போட்டு 5நிமிடம் கொதித்து குழம்பு சற்று கெட்டியானவுடன் இறக்கவும்.