பட வாய்ப்புக்காக நடிகை போடும் பலே திட்டம்!!

மலையாளத்தில் காதல் படம் மூலம் பிரபலமான நடிகையை, தமிழில் அழைத்து வர பல இயக்குனர்கள் போட்டி போட்ட நிலையில் ஒரு இயக்குனர் வெற்றி கண்டுள்ளார்.

நடிகை நடித்த படம் ரசிகர்களை கவர, தொடர்ந்து ரவுடியான பாடலுக்கு நடனம் ஆட அவரின் மார்க்கெட் திடீர் என்று உயர்ந்துள்ளது.

பல இயக்குனர்கள் நடிகை அதிக சம்பளம் கேட்பாரோ என்று பேச, நடிகையோ ஸ்கிரிப்ட் கரெக்டா இருந்தா, எனக்கு முக்கியத்துவம் இருந்தா சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன் என்று தடாலடியாகக் கூறிவிட்டாராம்.

பட வாய்ப்புக்காக நடிகையின் புது டெக்னிக் என்று கிசுகிசுக்கப்படுகிறது.