பணத்தை திருடிய இளைஞனின் கையை வெட்ட உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நீதிமன்றம்!

பணத்தை திருடிய இளைஞனின் கையை வெட்ட நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவர் சவூதியில் உள்ள ஹோட்டலில் வேலைசெய்து வந்தார். சுமார் 6 ஆண்டுகாலமாக அவர் அங்கு வேலை செய்துவந்த நிலையில் சமீபத்தில் 1.1 லட்சம் ரியால் கடையில் திருட்டு போயுள்ளதுடன், அவர் பணம் திருடியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இளைஞரை சவூதிக்கு அழைத்துச் சென்ற நண்பர், திருடப்பட்ட பணத்தைக் கொடுப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில் அதை கட்டாமல் காலம் தாழ்த்தியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து திருடிய இளைஞரின் அறையில் தீடீர் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அங்கு திருடுபோன பணம் கிடைத்துள்ளது.

மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்து வந்தது. அதில் இளைஞர் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து சவூதி குற்றவியல் நீதிமன்றமானது திருடிய இளைஞரின் கையை வெட்ட உத்தரவிட்டுள்ளது.