பதவி விலக தயாராக இருக்கும் ரிஷாட்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே அவருக்கு எதிராக நம்பிக்கையற்ற பிரேரணை அவசியமில்லையென அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

பொது விழாவொன்றில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தயா கமகே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எந்த சந்தர்ப்பத்திலும் பதவியை இராஜினாமா செய்வதற்கு தயாராக உள்ளதாக ரிஷாட்டை நாம் சந்தித்தபோது அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ரிஷாட் மீது குற்றச்சாட்டு காணப்படுமாயின் அவரே ஒரு முடிவை எடுப்பாரென நான் நினைக்கிறேன்.

மேலும் அவருக்கு எதிராக நம்பிக்கையற்ற எந்த நடவடிக்கைகளும் அவசியமில்லை” என தயா கமகே தெரிவித்துள்ளார்.