பனிச்சறுக்கு விளையாட்டில் சாதுரியமாக உயிர் தப்பிய வீரர்!-

பனிச்சறுக்கு வீரர் ஒருவர் சாகசத்தில் ஈடுபட முயன்ற போது எதிர்பாராவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இருப்பினும் சாதுரியமாக செயல்பட்ட பனிச்சறுக்கு வீரர் நேர்த்தியாக சறுக்கிச் சென்று தன்னை தற்காத்துக் கொண்டார்.

ஐரோப்பாவில் உள்ள பிரனீஸ்மலைத் தொடரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆவணப்படம் எடுப்பதற்காக அவருடன் சென்றிருந்த குழுவினர் இந்த காட்சியை பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

பிரனீஸ் மலைத் தொடர் ஐரோப்பாவின் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் இடையே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.