பனித்தரையில் இடம்பெற்ற டிராகன் படகுப்போட்டி

சீனாவில் பனித்தரையில் நடத்தப்பட்ட டிராகன் படகுப்போட்டி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அந்நாட்டில் 4 வது தேசிய இளையோர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக ஹார்பின் நகரில் (Harbin) படகுப்போட்டி நடத்தப்பட்டது.

உறைந்து கிடக்கும் பனிப்பரப்பில், ஓடுதளம் அமைத்து, சக்கரங்கள் பொருத்தப்பட்ட படகுகளை ஓட்டும் ஐஸ் டிராகன் படகுப் போட்டிதான் இது.

200 மீட்டர் நீளத்தில் நேர்த்தியான பனித்தளத்தில், படகுகளை இயக்க, துடுப்புகள் போல பிரத்யேக கைத்தடிகளை அவர்கள் பயன்படுத்தினர்.

தண்ணீர் என்ற கற்பனையில் பனிப்பரப்பை அழுத்திக் கொண்டே படகை முன்னேற்றிச் சென்றது.

போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் புதிய அனுபவமாக இருந்தது.