பயங்கரவாதி சஹ்ரான் ஹாசீமின் மரபணு பரிசோதனை அறிக்கை தயார்!

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமின் மரபணு பரிசோதனை அறிக்கை இந்தவாரம் வெளியாகவுள்ளது

குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பரிசோதனைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளன.

தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியும், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவருமான சஹ்ரானின் மரபணு பரிசோதனை அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் இரத்த மாதிரிகளை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.