பயணத்தை இலகுவாக்க வருகிறது பறக்கும் மோட்டார் சைக்கிள்கள்!!

பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக ஒரு அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் புனைந்துரைக்கப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத் தொழில் நுட்ப அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட ஜெட் எஞ்சின்களைக் கொண்டு பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கப்படும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்திலும் 15 ஆயிரம் அடி உயரத்திலும் செல்லும் திறனுடையவையாக பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பறக்கும் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விலை 3 லட்சத்து 80 ஆயிரம் டொலராக இருக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டில் இந்த மோட்டார் சைக்கிள்களை வாடிக்கையாளர்களின் பாவனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.