பயனரின் தனிப்பட்ட விவரங்களை பேஸ்புக்கிற்கு வழங்கும் பல்வேறு செயலிகள்

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்களில் பேஸ்புக் நிறுவனத்திற்கு பல்வேறு செயலிகள் பயனரின் விவரங்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களின் விவரங்களையும் பேஸ்புக் பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனரின் போன் மற்றும் இணைய நடவடிக்கைகளை சேகரிக்க வழி செய்யும் செயலியை இன்ஸ்டால் செய்ய பேஸ்புக் இளம் பயனர்களுக்கு பணம் கொடுத்திருந்தது.

இதனால் ஆப்பிள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு வழங்கியிருந்த சிறப்பு அனுமதிகளில் சிலவற்றை திரும்ப பெற்றது.

வெளியீட்டு முன் பணியாளர்களின் மத்தியல் சோதனை செய்யப்பட வேண்டிய அம்சம் மூலம் செயலியை இடையூறு செய்து பேஸ்புக் ஆப்பிள் நிறுவன விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்தது.

ஆப்பிள் இயங்குதளத்தில் உடல்நலம் மற்றும் ரியல் எஸ்டேட் செயலிகள் பேஸ்புக்கிற்கு பயனர் விவரங்களை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த செயலிகள் பேஸ்புக்கின் மென்பொருள் வளர்ச்சி முணையத்தின் (எஸ்.டி.கே.) வழியே பயனர் விவரங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த முணையம் செயலிகளில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. பேஸ்புக்கின் எஸ்.டி.கே.வில் ஆப் டெவலப்பர்களை பயனர் டிரெண்ட்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

இவைதவிர பேஸ்புக்கிற்கு மிகமுக்கிய விவரங்களை வழங்கிய செயலிகள் அனைத்தும் கஸ்டம் ஆப் ஈவென்ட்களை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.