பருக்களால் வந்த தழும்புகளா..? இதோ எளிய குறிப்புக்கள்

பருக்களை கிள்ளுவதால் ஏற்படும் தழும்புகளால் முக அழகையே கெடுத்துவிடும். இதனை தவிர்க்க பருக்களை நிறுத்துவதோடு, வந்த தழும்புகளை மறைய வைக்க சில எளிய இயற்கை வழிகள் உள்ளன.

3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 5 துளிகள் துளசி எண்ணெய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து,

முகத்தை வெதுவெதுப்பான நீரில் துடைத்து, இதனை தினமும் இரவில் படுக்கும் முன் பயன்படுத்தி வந்தால் பருக்கள் விரைவில் மறையும்.

சருமத்தில் உள்ள தழும்புகளை விட்டமின் சி நிறைந்த பொருட்கள் எளிதில் மறையச் செய்யும்.

அதற்கு விட்டமின் சி நிறைந்த எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, தினமும் இரவில் படுக்கும் முன் தண்ணீரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.