பறக்கும் விமானத்தில் பணிப்பெண்ணிடம் காதலை கூறிய பயணி: வேலை போன பரிதாபம் (வீடியோ)

விமானத்தில் பயணித்த பயணி பணிபுரியும் பணிப்பெண்ணுக்கு காதலை தெரிவித்ததால் குறித்த பெண்னை விமான நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

china Eastern Airlines இல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விமானத்தில் பணிப்பெண்ணாக இருப்பவர் எக்ஸ்யோமி. கடந்த மே மாதம் இவர் விமானத்தில் பணிப்பெண்ணாக பயணித்த போது இவருடைய காதலரும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார்.

விமானம் பாதி வழி கடக்கையில் திடீரென அவரது நண்பர் எக்ஸ்யோமியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தினை விமானத்தில் இருந்த பயனிகள் படம்பிடித்துள்ளனர். அதில் ஒருவர் குறித்த வீடியோவினை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனால், விமானத்தில் ஓர் பணிப்பெண் இவ்வாறு நடந்துக்கொள்ளுதல் தவறு என தெரிவித்து அந்த விமான நிறுவனம் குறித்த இளம்பெண்ணை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

பயணிகளிடம் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளாமல் பணிப்பெண் இவ்வாறு நடந்துக்கொள்ளுதல் தவறு என பணி நீக்கத்திற்கான காரணமென குறித்த விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.