பற்றி எரிந்த குடிசைகள்!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே குடிசை வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை அதிகாரிகள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் எவ்வித உயிரிழப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அம்மாநில பொலிசார் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.