பாகுபலி, காலா சாதனைகளை வீழ்த்தி மாஸ் காட்டிய சர்கார்!

தீபாவளி தினத்தன்று வெளியாகிய நடிகர் விஜயின் சர்கார் திரைப்படம் முதல் நாளிலேயே பல்வேறு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்துள்ளது.

இதன் மூலம் விஜய் உச்சத்தில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கிறார் என்றே கூறலாம்.

மேலும் சர்வதேச அளவில் முதல் நாளில் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்ற சாதனையை சர்கார் தக்கவைத்துள்ளது.

இந்த படத்திற்கு முதல் நாளிலேயே எதிர்பார்த்ததை விட அதிகமான அளவு வரவேற்பு இருந்தது.

சர்கார்சென்னையில் மட்டும், 2.37 கோடி ரூபாய் கலெக்ஷன் பெற்று சாதனை படைத்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் 1.76 கோடி ரூபாய் சாதனையை சர்கார் முறியடித்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் பாகுபலி படத்தின் வசூல் சாதனைகளை சர்கார் வீழ்த்தியுள்ளது. சர்வதேச அளவில், சர்கார் 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் 2.47 கோடி ரூபாய், ஆஸ்திரேலியாவில் 1.16 கோடி ரூபாய் , பிரிட்டனில் 1.17 ரூபாய் கோடி என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது சர்கார்.

ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் 110 கோடி ரூபாயை சர்கார் படம் வசூலித்துள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.