பாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி!

சர்ச்சை கருத்து வெளியிட்டு பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சஹீட் அப்ரிடி சிக்கலில் சிக்கியுள்ளார்.

தனது மகள்கள் வீட்டிற்கு வெளியே சென்று எந்த விளையாட்டையும் விளையாடுவதற்கு அனுமதிக்கமாட்டேன் என அப்ரிடி தனது கேம்சேஞ்சர் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

“எனது மகள்கள் வெளியே மைதானத்திற்கு செல்லாமல் எந்த விளையாட்டையும் விளையாடலாம். ஆனால் வெளியில் மைதானங்;களில் இடம்பெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள அவர்களிற்கு நான் அனுமதி வழங்கப்போவதில்லை கிரிக்கெட் விளையாடுவதற்கும் எனது மகள்களுக்கு நான் அனுமதி வழங்கப்போவதில்லை.

சமூக மற்றும் மத காரணங்களிற்காகவே இந்த முடிவை எடு;த்தேன். பெண்களின் உரிமைகளிற்காக குரல்கொடுப்பவர்கள் எனது முடிவு குறித்து எதனையும் தெரிவிக்கலாம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்ரீடியின் இந்த கருத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் பெருமையை தேடித்தந்துள்ள மகளிர் கிரிக்கெட் அணியையும் தனது கருத்து மூலம் அப்ரீடி அவமதித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

அப்ரீடியின் இந்த கருத்தை பாகிஸ்தானிற்கு இன்னொரு பிரதமர் தயாராகிவருகின்றார் என ஒருவர் டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.

2014 இல் பெண்களின் கிரிக்கெட் திறமை குறித்த கேள்விக்கு பெண்களின் சமையல் திறமை குறித்து கருத்து தெரிவித்து அப்ரீடி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.