பாரிய மோசடி குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடி குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரம் கொண்ட அதிகாரி கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

5.5 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வெளியில் வங்கிக் கணக்கு ஒன்றுக்கு மாற்றப்பட்டது குறித்து புகார் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது நிதிமோசடி விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் என்பவற்றால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விசாரணைகளில் இலங்கை கிரிக்கட் சபைக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆகவே முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.