பார்த்திபன் – சீதா மகள் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரனை மணக்கிறார்

நடிகர் பார்த்திபன் – சீதா தம்பதியினருக்கு அபிநயா, கீர்த்தனா என 2 மகள்களும் ராக்கி என்ற மகனும் உள்ளார்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் பார்த்திபனும், சீதாவும் விவாகரத்து பெற்று தனியாக வசிக்கின்றனர்.

பார்த்திபன் – சீதா தம்பதியின் இரண்டாவது மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.

இதுபற்றி சீதா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஆண்டு என் இரண்டாவது மகள் கீர்த்தனாவின் திருமணம் நடந்தது. பிறகு என் மூத்த மகள் அபிநயாவுக்கு தீவிரமாக வரன் தேடினோம்.

மாப்பிள்ளை நரேஷ் கார்த்திக் சென்னையில் தொழிலதிபராக இருக்கிறார்.

அவர் நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன். அதாவது நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன். மாப்பிள்ளை வீட்டார் எங்களுக்கு தூரத்து சொந்தம்.

கடந்த ஜனவரி மாதம் சோழா ஹோட்டலில் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தது. அதில் 2 குடும்பங்களை சேர்ந்த முக்கிய விருந்தினர்களை மட்டும்தான் அழைத்து இருந்தோம்.

அடுத்த மாதம் மார்ச் 24 ஆம் திகதி சென்னையில் கல்யாணம் நடக்க இருக்கிறது. மகள் என்னை விட்டு தூரமாக போய்விடக் கூடாது என்றுதான் வெளிநாட்டு வரன்களை தவிர்த்தேன் என்று கூறியுள்ளார்.