பாலச்சந்திரன்-இசைப்பிரியா குறித்து மகிந்த வெளியிட்ட தகவல்!!-

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிறுவன் அல்ல அவன் ஒரு போராளி என்றும் அதேபோன்று இசைப்பிரியாவும் ஒரு போராளி எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று செய்தியாளர்கள் முன்னிலையில் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச பெங்களூரு சென்ற போது செய்தியாளர்கள் பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா படுகொலைகள் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதற்குப் பதலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாலச்சந்திரன் சிறுவன் அல்ல போராளி என்றும் அவருக்கு 5 மெய்ப்பாதுகாவலர்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார் என்றும் மகிந்த கூறியுள்ளார்.

மேலும் இசைப்பிரியாவும் ஆயுதம் தூக்கிய ஒரு போராளி. அவருக்குப் புலிகள் அமைப்பினர் சூட்டிய பெயர்தான் இசைப்பிரியா.

இவர்களின் இறப்பிற்கு புலிகள் தான் பொறுப்புக் கூற வேண்டுமே தவிர நாம் அல்ல என்று கூறியுள்ளார்.

இப்படிச் செய்த எம் மீதும், போர்வீரர்களான எமது படையினர் மீதும் சில அனைத்துலக அமைப்புகளும், சில நாடுகளும் போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்துவது நியாயமற்றது என்று அவர் மேலும் கூறியமை சுட்டிக்காட்டத்தக்கது.