பாலியல் என்ற வார்த்தை தேடலில் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட இலங்கை!

கூகுள் தேடு தளத்தில் அதிக தடவை ‘Sex’ என்ற வசனத்தை தேடிய நாடுகளில் இலங்கை 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக முன்னிலையில் இருந்த இலங்கை கடந்த 12 மாத காலப்பகுதியில் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 12 மாதங்களில் ‘Sex’ என்ற வசனத்தை அதிகமான தேடிய நாடுகள் பட்டியலில் பங்களாதேஷ் முதலாம் இடத்தை பிடித்துள்ளது.

எதியோப்பியா இரண்டாமிடத்திலும் , இலங்கை மூன்றாமிடத்திலும் இருக்கின்றன. அத்துடன் நேபாளம் 4ஆம் இடத்திலும் இந்தியா 5ஆம் இடத்திலும் இருக்கின்றன.

இதேவேளை இலங்கையில் அதிகமாக குறித்த வசனத்தை தேடிய நகரங்களில் வடமத்திய மாகாணத்தின் பிகிம்பியாகொல்ல முதலிடத்தில் இருக்கின்றது.

ஆனால் கடந்த முறை ஹோமாகம நகரம் முதலிடத்தில் இருந்தது.

வழமையாக இலங்கையில் ஏப்ரல் , ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களிலேயே அதிகமாக கூகுள் தேடுதளத்தில் குறித்த வசனம் அதிகமாக தேடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.