பாலியல் குற்றச்சாட்டு காரணமாக 152 பாதிரியார்கள் அதிரடி நீக்கம்

மெக்ஸிகோவில் கடந்த 9 ஆண்டுகளில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலுக்கு அடுத்து அதிக கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் இருப்பது மெக்சிகோ நாட்டில் தான்.

இந்நிலையில் தான் சில பாதிரியார்களும், பிஷப்புகளும் பாலியல் பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளனர் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனை பெரியதாக மாறியது.

தேவாலயங்களில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் பாதிரியார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உலக அளவில் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் 152 பாதிரியார்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெக்சிகோ தேவாலயம் ஒன்றின் பேராயர் ஒருவர் கூறுகையில்,

கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 152 கத்தோலிக்க பாதிரியார்கள் சிறார்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக தேவாலயத்திற்கு நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் சிறை தண்டனை பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.